அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும்.





மங்கலச்சிறப்புடன் பராபவ எனு‌ம் நாமத்துடன் சித்திரை புத்தாண்டு மலர்ந்துள்ளது. 
எமது தமிழ் மக்கள் பல்வேறு இடர்பாடுகளையும் துயரங்களையும் அவலங்களையும் சந்தித்து கடந்து வந்துள்ளார்கள். இன்றுவரை பல்வேறு விதமான உரிமை மறுப்புக்களை எதிர்கொண்டு தான் பயணிக்கிறார்கள். 
அண்மையில் வெளியான கல்வி பெறுபேறுகள் சில பெருமையை வழங்கினாலும், சமயம் சார்ந்த நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ளோம். விழுமியமேம்பாடு உயரிய நிலையில் உள்ளது என கூற முடியாதுள்ளமை மிகவும் வேதனை தருகிறது. 
இவற்றிலிருந்து நாம் மீண்டு உயர்வு பெற வேண்டும். இதற்கு நாம் ஒவ்வொருவரும் தான் பொறுப்பு. ஆகவே பெற்றோர்கள், பெரியோர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம். ஒவ்வொருவரும் மொழியின் மீதும் சமயத்தின் மீதும் பற்றுறுதியுடன் செயல்பட வேண்டும். 
இவை எல்லாமே நிகழ வேண்டும் என்றால் திருவருளும் துணை நிற்க வேண்டும். இந்த தருணத்தில் திருவருளும் குருவருளும் ஒருசேர பிரார்த்திப்போம். நற்பாங்குடன் அனைத்தும் சிறப்புற பிரார்த்திப்போம். அனைவர் வாழ்விலும் அமைதியானது நிலை பெறட்டும். கல்வியிலும் கலைகளிலும் சிறப்புடன் மாணவர்கள் உயர்வு பெறட்டும். அனைவரும் வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வளமும் நலமும் பலமும் பெற்று இன்பகரமாக வாழ்க வாழ்க வாழ்கவே என அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்து மனமார்ந்த நிறைந்த நல்வாழ்த்துக்களையும் இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறோம். 
அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். 
சுபமங்கலம். 

"சிவாகமகலாநிதி "
சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்.
தலைவர், இந்துக் குருமார் அமைப்பு

பிரதிஷ்டா பூஷணம்.
சிவஸ்ரீ. சாந்தரூப குருக்கள். 
செயலாளர், இந்துக் குருமார் அமைப்பு.