மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இவ்வாண்டுக்கான உற்பத்தித்திறன் போட்டிகள் தொடர்பான கலந்துரையாடல் மண்முனைபற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உற்பத்தி திறன் போட்டி தொடர்பான தெளிவூட்டல், உற்பத்தி திறன் உத்தியோகத்தரால் வழங்கப்பட்டது.
இதன்போது கிளை ரீதியாக கிளைத் தலைவர்கள் மற்றும் தரவளைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





