மடத்தடியில் களைகட்டிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் .

 














வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று (28) செவ்வாய்க்கிழமை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில் உதவிக்குரு பிரம்மஸ்ரீ பிரபாத் சர்மா உதவியுடன் முதற் தடவையாக அம்மனின் திருக்கல்யாணம் நடைபெற்றது.

ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அம்மனின் திருமாங்கல்ய தாரணம் நடைபெறமுன்பு மாங்கல்யம் அனைத்து பக்தர்களிடம் ஆசீர்வாதத்திற்கு வழங்கப்பட்டது.

ஆலய பரிபாலன சபை தலைவர் கி.ஜெயசிறில்,  ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட நிருவாக சபையினர் மற்றும் பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு மேளதாளம் மற்றும் பட்டாசு வெடிகளுக்கு மத்தியில் குரவை ஒலியுடன் அம்மனின் கழுத்தில் தாலி ஏறியது.

இறுதியில் திருமாங்கல்ய இனிப்புகள் பலகாரங்கள் பகிரப்பட்டன.
 
 
 
( வி.ரி.சகாதேவராஜா)