மட்டக்களப்பு மாந்தீவில் நிலை கொண்டுள்ள காட்டு யானைகள் ஆறு மணித்தியால போராட்டம்!

 

 









































 ஆரையம்பதி     செய்தியாளர் 

 

மட்டக்களப்பு மாந்தீவில் நிலை கொண்டுள்ள காட்டு யானைகள் ஆறு மணித்தியால போராட்டம்! 
 6 காட்டு யானைகளை மூன்று பிரிவுகளாக பிரிந்து மாந்தீவிலிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்!

 
மக்கள் குடியிருப்பு கிராமங்களில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்தும் விவசாய நிலங்களுக்குள் புகுந்தும் யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது.

காட்டுப் பகுதியில் இருந்து  ஆற்றைக் கடந்து மாந்தீவுக்கு யானை கூட்டம் படையெடுத்து வந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்
மாந்தீவில் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினர்.
வவுணதீவு பகுதியில் இருந்து மாந்தீவு பகுதிக்கு வந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் மற்றும்  ராணுவத்தினர் இணைந்து மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர்

இந்நிலையில் 
 சுமார் 30 பேர் கொண்ட மட்டக்களப்பு வன ஜீவராசி  திணைக்கள குழுவினர், மற்றும் ராணுவத்தினர் மாந்தீவில்  முகாமிட்டுள்ள காட்டு 
யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து.
சுமார் 6 மணித்தியாலம் 
 மூன்று பிரிவுகளாக பிரிந்து கடும் 
 போராட்டத்திற்கு மத்தியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

 
இரவு நேரங்களில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் அதிக அளவு சுற்றி வருவதால் யானை நடமாட்டம்  உள்ள குடியிருப்பு பகுதிகளில் கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
 சுமார் 6 மணித்தியால போராட்டத்தின் பின் ஆறு 
காட்டு யானைகளை  மாந்தீவு தீவிலிருந்து அடர்ந்த வனப்பகுதிகளுக்குள்  வனத்துறையினர்,  மற்றும் ராணுவத்தினர் ஒன்று சேர்ந்து விரட்டி அனுப்பி வைத்தனர்.