ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 


தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் மேலும் பல இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் அரசாங்கம் இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தலையும் அல்லது மறுப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.