தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

 

 


 

தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல - நாலந்த பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் காயமடைந்த 11 பயணிகள் சிகிச்சைக்காக நாலந்த மாவட்ட மருத்துவமனை மற்றும் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை விபத்தின் பின்னர் இ.போ.ச பேருந்தின் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.