பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வாடகை வாகன சாரதி ஒருவரை உனவட்டுன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண், சம்பந்தப்பட்ட வாடகை வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சந்தேக நபர் ஒரு பல்கலைக்கழக மாணவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உடனடியாகச் செயற்பட்ட உனவட்டுன சுற்றுலா காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி உப போலீஸ் பரிசோதகர் அமில பிரியங்கர தலைமையிலான குழுவினர், சந்தேக நபரையும் அவர் பயன்படுத்திய வாகனத்தையும் கைது செய்துள்ளனர்.





