கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் மிகவும் பின்தங்கிய வலயமாக கணிக்கப்படுகின்ற மட்டு.மேற்கு வலயம், நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தது.
கிழக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சையின் (முதல் மற்றும் இரண்டாம் முயற்சி) பெறுபேறு பகுப்பாய்வு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் வெளியிட்ட இந்த அறிக்கையின் படி, மொத்த மாகாணத் தேர்ச்சி வீதம் 66.32% ஆக பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டில் மாகாண மட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 74.56% தேர்ச்சி வீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மத்திய (74.46%) இரண்டாம் இடத்தையும், திருக்கோவில் (71.68%) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
அடுத்தடுத்த இடங்களில் மூதூர், பட்டிருப்பு, மற்றும் கல்முனை வலயங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மாணவர்கள் அதிக அளவில் பரீட்சையில் கலந்து கொண்ட வலயங்களில் கல்முனை 71.15% தேர்ச்சி வீதத்துடன் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
( வி.ரி.சகாதேவராஜா)





