திருக்கோவில்
பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்பின்
அனுசரணையுடன் சித்திரைப் புதுவருட சிறப்பு நிகழ்வு நேற்று (17)பிரதேச செயலக
வளாகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில்
உதவி பிரதேச செயலாளர் ரெட்ணம் சுவாகர் ,கணக்காளர்
எம்.கேந்திரமூர்த்தி,உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.அனோஜா உசாந்த்
,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப்,திருக்கோவில் பிரதேச சமூர்த்தி
தலைமைப்பீட முகாமையாளர் எம்.அரசரெட்ணம் , சமுர்த்தி பிரிவு முகாமைத்துவ
பணிப்பாளர் எம்.கண்ணதாசன் தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர்
எஸ்.சதீஸ்,விநாயகபுரம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சசிகுமார் மற்றும்
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,வலய வங்கி உதவி
முகாமையாளர்கள்,வங்கி வலய கள உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என
பலரும் கலந்துகொண்டனர்.
பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
( வி.ரி.சகாதேவராஜா)










