அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 


இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் சுமார் 60 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது வரவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த தீர்மானம்110 மேலதிக வாக்குகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.