அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில்
புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா
கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சுப வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கும்பாபிஷேகத்தை இன்று காலை 10 மணியளவில் சிறப்பாக நடாத்தினார்கள்.
கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் கர்மாரம்பம் நடைபெற்றது.
மறுநாள் வெள்ளிக்கிழமை 10.04.2026 மற்றும் 11.04.2026 சனிக்கிழமை ஆகிய தினங்களில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலய தலைவர் பொன். ரமேஷ்,
செயலாளர் குமரேசன் ,
பொருளாளர் யோகேந்திரன் ஆகியோருடன் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)












