நாட்டில் மின்சாரத் தடையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை - நளிந்த ஜயதிஸ்ஸ

 


நாட்டில் மின்சாரத் தடையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி ஆதாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய நிலைமை முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.