இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள வரலாற்று மற்றும் கலாசார விழுமியங்கள் குறித்து ஆழமாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இந்தியாவின் "அண்டை நாட்டுக்கு முன்னுரிமை" கொள்கையின் கீழ், இரு நாடுகளினதும் நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்திய வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் 'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் குடியரசுத் துணைத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.




