மட் /இந்து கல்லூரி பாடசாலை அதிபர் கே.பகிரதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டைமுனை விளையாட்டு கழகம் ஒரு மில்லியன் பெறுமதியான கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபரினால் கோட்டைமுனை விளையாட்டு கழக தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் கிரிக்கட் வீரர்களை வலுப்படுத்துவதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மட் /இந்து கல்லூரியின் முன்னால் கிரிக்கட் அணி வீரர் இரா.உதயராஜன் அவர்களினால் கிரிக்கட் உபகரணங்களை பாடசாலை அதிபர் கே.பகிரதன் அவர்களிடம் இன்று (10) கையளித்தார்.
மேலும் இப்பாடசாலை மாணவர்களை சிறந்த கிரிக்கட் வீரர்களாக மாற்றுவதற்கான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் தலைவர் கே.சதீசன், கோட்டைமுனை விளையாட்டுக் கழக பணிப்பாளர்களான எஸ்.ரஞ்சன், இ.சிவநாதன், ஈ.பி. பி அக்கடமியின் இணைப்பாளர் வீ. வசந்தமோகன், மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னால் கிரிக்கட் அணி வீரர் இரா.உதயராஜன் கருத்து தெரிவிக்கையில் சந்தர்ப்பமும் வாய்ப்பும் ஒரு தடவை ஏற்படும் அதனை விளையாட்டு வீரர்கள் முறையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.




