கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று 16.04.2026 வியாழக்கிழமை மில்லர் விளையாட்டுக் கழக மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கிராமத்தின் ஒற்றுமையையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இவ்விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில், பல்வேறு பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்குச் விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் திரு.சந்திரகாசன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரின் பிரதான இணைப்பாளருமான திரு.த.பிரபாகரன்,
அரச உயர் அதிகாரிகள், கல்விமான்கள், ஊர் பிரமுகர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள்,
கிராமிய மட்டத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். இவ்வாறான கலாசார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஊடாக சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையையும் நல்லுறவையும் பலப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.
கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் சிறந்த ஒருங்கிணைப்பில், ஒரு சமூகத் திருவிழாவாக இவ் விளையாட்டு விழா இனிதே நிறைவடைந்தது.






.jpeg)
.jpeg)




