மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனானது இன்றைய காலகட்டத்தில் மக்கள் பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு ஆளாகி மன அழுத்தங்களுக்கு உட்பட்டு இருப்பதைப் போக்கி அவர்கள் மனதில் அமைதியையும் ஆன்மீக உணர்வையும் ஏற்படுத்தும் முகமாக சற்சங்கங்களை நடாத்தி வருகின்றது.
இல்லங்களுக்குச் சென்று தியானப் பயிற்சி, ஆன்மீக உரைகளை சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தாஜீ மகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கல்லடியில் வசிக்கும் திரு.திருமதி. ஹரிதாஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி ஆக் ஷராத்மானந்தாஜீ மகராஜ் அவர்களும் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் நீலமாதவானந்தாஜீ மகராஜ் அவர்களும் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் பிரம்மன்யானந்தாஜீ மகராஜ் அவர்களும் சிறப்பித்ததோடு பல பக்தர்களும் கலந்து கொண்டனர்.




