சுகாதாரம்
மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால்
நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர்,
நேற்று (8) புதன்கிழமை, வைத்தியசாலையின் பணிப்பாளர் பணிமனையில்
பதவியேற்றனர்.
சுகாதாரம்
மற்றும் வெகுஜனஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட 16
உறுப்பினர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர்
குணசிங்கம் சுகுணன் முன்னிலையில் பதவியேற்றனர்.
புதிய
வைத்தியசாலை குழுவின் தவிசாளராக, கல்முனை மாநகர சபையின் முன்னாள்
உறுப்பினரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன்
அமைச்சரினால் நேரடியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இப்
பதவியேற்பு வைபவத்தில், பிரதித் தவிசாளராக ஓய்வு நிலை உதவிக் கல்விப்
பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா மற்றும் பொருளாளராக நாவிதன்வெளி
பிரதேச சபையின் தவிசாளர் இ.
ரூபசாந்தன் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய சபையின் செயலாளராக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மருத்துவர் எஸ். ராகுலன் பதவிவழியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய உறுப்பினர்களாக
வி. சந்திரன்,
செ. சுரேஷ், செ. சதீஸ்குமார் ,
ஆ
.கதிரமலை , லெ. லெட்சுமிகாந்தன், ந. சௌவியதாசன்,செ. தங்கவேல் , எஸ்.
காந்தரூபன், கே. பிரகலாதன் , நி. நிமோஜனா, க. சிவலிங்கம்,சி.
சிவராஜகுமார், கா. மகேந்திரராசா ஆகியோர் பதவியேற்றனர்.
இவர்களுக்கான, அமைச்சரின் நியமனக் கடிதங்களை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
நிகழ்வில், நிருவாக உத்தியோகத்தர் ரி.தேவஅருள், தாதிய பரிபாலகர் என்.
சசிதரன், பிரதம முகாமைத்துவ உதவியாளர் திருமதி ரோஸி சுகுமார் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
( வி.ரி. சகாதேவராஜா)
















