மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பதினைந்து வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதி!
இன்று (15) மட்டக்களப்பு நாவற்குடா உள்வீதியொன்றில் தேவாலயம் அருகில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார்சைக்கிள்களில் நாவற்குடா உள் வீதியொன்றினூடாக அதிவேகமாக பயணித்துள்ள நிலையில் அதில் ஒரு மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மதிலுடன் மோதிய மோட்டார்சக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு(15 வயதுடைய) யாக்கோப் முகமட் சைக்கான் மற்றும் (15) வயதுடைய இல்ஹாம் முஹமட் ருசைத் எனும் சிறுவர்களே படுகாயமடைந்தனர்.
காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுவர்களை
காத்தான்குடி ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவர்கள் தலைக்கவசமின்றி பயணித்தமையே படுகாயமடைய காரணம் என காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


.jpeg)




