பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பிராந்தியத்தில் இன்று அதிகாலை
5.5 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானின்
தலைநகர் இஸ்லாமாபாத், வடமேற்கு கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa),
கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்ளிட்ட பல
பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.
அந்த நாட்டு நேரப்படி இன்று காலை சுமார் 7.30 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான்
வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி
இந்து குஷ் (Hindu Kush) மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 199
கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இருப்பினும், எல்லைக்கு இருபுறமும் உடனடி உயிரிழப்புகளோ அல்லது பாரிய சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது அந்த பகுதிகளில் மேலதிக பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்





