இணையவழி நிதி மோசடி செய்வதற்கு வெளிநாட்டினர் இலங்கையை நாடுவது ஏன் ?

 


இணையவழி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை, ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 குறித்த சந்தேக நபர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 சிலாபம், இரணவில பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 133 சீனப் பிரஜைகளும், 13 வியட்நாம் பிரஜைகளும், ஒரு மலேசியப் பிரஜையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்