கடும் மழையில் நனைந்து கொண்டிருந்த தாய், தந்தைக்கு உதவச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்த துயரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று(09) மாலை இடம்பெற்ற இந்த துயரமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்தனர் இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.





