களுத்துறை - பேருவளை பகுதியில் கடற்றொழில் துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட நபரொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (18.04.2026) பேருவளை கடற்றொழில் துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பேருவளை கடற்றொழில் துறைமுகத்தில் பல நாட்களாக நங்கூரமிட்டிருந்த ஒரு கடற்றொழில் படகை பேருவளை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போதே, போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபரொருவர் காவல்துறையினரிடமிருந்து தப்பிப்பதற்காக மற்றொரு கடற்றொழில் படகில் ஏறி கடலில் குதித்துள்ளார்.
இந்நிலையில், கடலில் குதித்த நபரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் தேடுதலை தொடங்கிய போதிலும், சந்தேக நபரை காவல்துறையால் பிடிக்க முடியவில்லை.
அதன்பின்னர், கடலில் குதித்த நபரின் சடலம் பேருவளை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் கடலில் மிதந்த நிலையில், கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.





