அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (10) நிறைவடைகிறது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்து, ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.





