இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டுக்கு தடை .

 

 


 இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டைத் தடை செய்யும் நடைமுறையைச் சட்டபூர்வமாக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

'சிறுவர் நலன்புரி மற்றும் பாடசாலைகள் சட்டமூலத்தை' தடையின்றி நிறைவேற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி தடை என்பது ஒரு வழிகாட்டியாக (Guidance) மட்டுமே இருந்து வந்தது.

எனினும், எதிர்க்கட்சிகளின் அழுத்தங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், இதனை ஒரு சட்டரீதியான தேவையாக மாற்ற அரசாங்கம் இணங்கியுள்ளது.