டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட தற்காலிக வீடுகளை மே மாத இறுதிக்குள் கட்டி முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

 


'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான தற்காலிக வீடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த தற்காலிக வீடுகளை மே மாத இறுதிக்குள் கட்டி முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.