ஆயுர்வேத வைத்திய துறையின் யூனானி வைத்தியத்தை காரைதீவுக்கு கொண்டு வரும் இளம் வைத்தியர் திருமதி டெலக்சனா உமாரமணன் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராஜா தெரிவித்தார்.
இன்று (13) காரைதீவில் யூனானி வைத்திய நிலைய திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய திரு வி.ரி.சகாதேவராஜா மேலும் உரையாற்றும் போது,
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணுக்கு மற்றுமொரு வைத்திய துறை, காலடி எடுத்து வைத்திருக்கின்றது என்று சொல்லலாம்.
உண்மையிலே இன்று மனிதர்களது வாழ்க்கை கோலங்கள்( life style) மாறி வருகின்றன. குறிப்பாக, அவர்களது நடை, உடை பாவனை அனைத்தும் உடனடி உணவு என்றும், வேறு வேறு உணவு வகைகளிலும் கவனங்கள் செலுத்தப்பட்டு வருகின்றன.
அதன் காரணமாக சமுதாயத்திலே நோய்நொடிகள் கூடுதலாக வருகின்றன.
எனவே அவர்கள் வைத்தியரை, வைத்தியசாலைகளை நாட வேண்டிய கடமைப்பாடும் இருக்கின்றது. இந்த இடத்திலே
காரைதீவை பொறுத்தவரையிலே
சுதேச வைத்தியம் அதுவும் ஆயுர்வேத வைத்தியம் என்பது காலாகாலமாக இருந்து வருகின்ற ஒன்றுதான்.
இருந்தாலும் அதற்கும் அப்பால் யூனானி மருத்துவம் என்பது சற்று
வித்தியாசமான ஒன்று எமது சமுதாயத்திலே யூனானி மருத்துவம் ஒரு வித்தியாசமான
மருத்துவ முறை. ஆனால் அந்த முறையையும் பயின்று துணிவோடு இன்று இந்த
காரைதீவு மண்ணுக்கு முதன்முறையாக இந்த யூனானி மருத்துவத்தை
அறிமுகப்படுத்துகின்றார் திருமதி டெலக்சனா உமாரமணன்.
அவர் அந்தப் பயிற்சியை கொழும்பிலே
ஒரு பட்டப்படிப்பை முடித்து, இன்று காரைதீவு பிரதான வீதியிலே, Dr.
உமாசங்கரது, பல் சிகிச்சை நிலையத்துக்கு அருகிலே இந்த நிலையம் நல்லதொரு
நாளிலே இன்று இந்த நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
யுனானி மருத்துவத்தின் சிறப்புகள் என்பது அபரிமிதமானவை, அவற்றையும் எம்மக்கள் உணர வேண்டும் என்பதற்காக இன்று டெலக்சனா உமாரமணன் இந்த இடத்திலே அதனை ஏற்படுத்தி இருக்கின்றார்.
உண்மையிலே காரைதீவு மக்கள் அவரை பற்றி பெருமைப்பட வேண்டும்.திரு சோதீஸ்வரன் அவர்களது குடும்பத்தில் முக்கியத்துவமான சிகிச்சை முறையான மருத்துவ முறைகளை முதலாவதாக தடம் பதித்திருக்கின்றார்.யூனானி மருத்துவத்திலே பட்டப் படிப்பை முடித்து திருமதி டெலக்சனா உமாரமணன் டாக்டர் ஆக இருக்கின்றார். ஆக இன்றைய தினம் தொடக்கம் காரைதீவு மண்ணுக்கு இந்த யூனானி மருத்துவத்துறை அறிமுகமாகின்றது என்ற செய்தியை சொல்லி மக்கள் !அனைவரும் இந்த இடத்துக்கு வந்து அவரது சேவையை பெற வேண்டும். அவரை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும், என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்





