ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள்
குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில்
தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
விருந்து நிகழ்வின் போது, மாணவர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம்
ஏற்பட்டுள்ளது.
இந்தத் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியபோதே குறித்த மாணவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த
மாணவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக
விசாரணைகளை ஹோமாகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





