மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் மட்டக்களப்பு மாநகர சபையினால் பிரம்மாண்டமான பட்டத் திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன .

 

 























 

















 மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில்  (26, 04, 2026) 
தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால்  ஞாயிற்றுக்கிழமை  கல்லடிக் கடற்கரையில் 
பிரம்மாண்டமான பட்டத் திருவிழா  மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்  பெற்றது!


 பிற்பகல் 3:30 மணி முதல் கல்லடி கடற்கரையில் வண்ணமயமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

 பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மாலை 5:30 மணிக்கு மேல் மட்டக்களப்பு மண்ணின் கலைஞர்கள் பங்கேற்கும் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்வுகள் இடம் பெற்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின்   பல்வேறு வடிவங்கள் மற்றும் வர்ணங்களைக் கொண்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டு போட்டிகள்  நடைபெற்றது. இதில் தனிநபர்களும் குழுக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுனர்.

இந்நிகழ்வு வைபவ ரீதியாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன்  அவர்களினால் ரிபன் வெட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது

 மாலை 5:30 மணி முதல் மட்டக்களப்பு மண்ணின் கலைஞர்கள் பங்கேற்கும் பாரம்பரிய இசை மற்றும் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது.

மிக அதிகளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர். 

இப் போட்டியானது மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன்  தலைமையில் இடம்பெற்றது.

இப் போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ராசமானிக்கம் சாணக்கியன் கலந்து சிறப்பித்தார்

போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசில்கள் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவலக பணிப்பாளர், மாநகர சபை முதல்வர் மாநகர சபை ஆணையாளர்  கரங்களால் வழங்கி வைக்கப்பட்டன.
 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கலாசார பண்பாட்டுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகர சபை பிரதி முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட  பொலீஸ் நிலைய அதிகாரிகள், முன்னாள் மாநகர சபை முதல்வர் சரவணபவன் கலந்து கொண்டனர்.

இப் போட்டி ஆனது புத்தாக்கம், கலை நயம், பிரமாண்டம் மற்றும் எமது பிரதேசத்தின் பாரம்பரியங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலமைந்த கருப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு சுயாதீன நடுவர்களினால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.