இன்று மாலை ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி லொறி வந்து கொண்டிருந்தபோது ஆரையம்பதியில் ஒருவர் துவிச்சக்கர வண்டியுடன் பிரதான வீதியை கடக்க முற்பட்டவேளை லொறியுடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர்.
பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த 40 வயதுடைய செல்லன் சின்னக்குட்டி என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)




