வரலாற்று
பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா
கும்பாபிஷேக பெருவிழா இன்று 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக
நடைபெற்றது.
ஆலயத்தை அழகுற
நிருமாணித்த அவுஸ்திரேலியாவில் வாழும் நிந்தவூரை பூர்வீகமாக கொண்ட
இராமலிங்கம் ரவீந்திரதேவன் தலைமையில் இம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா
நடைபெற்றது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
( வி.ரி.சகாதேவராஜா)










