காத்தான்குடி நடுக்கடலில் தத்தளித்த இந்திய படகு கடற்படை, இராணுவ பொலிஸாரின் உதவியுடன் கரைக்கு இழுத்து வந்த மீனவர்கள்

 

 

 





நடுக்கடலில் தத்தளித்த இந்திய படகு கடற்படை, இராணுவ பொலிஸாரின் உதவியுடன் கரைக்கு இழுத்து வந்த மீனவர்கள் 
காத்தான்குடி கடலில் சம்பவம்!

கரையிலிருந்து  சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பாரிய படகு ஒன்றை காத்தான்குடி மீனவர்கள் இன்று(20) நண்பர்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளனர் .

பொலிசார், இராணுவத்தினர், கடற்படையினரின் உதவியுடன் குறித்த படகு இழுத்து வரப்பட்டுள்ளது .

இந்திய நாட்டின் கல்கத்தா விளையாட்டு கழகம் என குறித்த படகில் பொறிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது . இதுவரை காலத்தில் இவ்வாறான ஒரு படகு குறித்த கபற்பிரதேசத்தில் பிரதேசத்தில் இவ்வாறு ததாதளிக்க வில்லை.இதுவே முதல்தடவை என மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்

படகை செலுத்துபவர் யாருமின்றி இயந்திரமும் இன்றி குறித்த படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருக்கின்றது என்ற தகவல் காத்தான்குடி பிரதேச மீனவர்களுக்கு கிடைத்த போது கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரின் அனுமதியை பெற்று மீனவர்கள் நடுக்கடலுக்குச் சென்று கரைக்கு இழுத்து வந்துள்ளனர் 

சுமார் 18 அடி நீளம் உள்ள குறித்த படகு தற்போது இராணுவம், கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர் 

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டு வருகின்றனர்