மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக
மர முந்திரிச் செய்கை பெரும் பாதிப்பு!
40,000 ஏக்கரில் செய்கை! விவசாயிகள் பாதிப்பு )
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக மரமுந்திரிகைச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
இலங்கையில் அதிகளவில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 40,000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
மரமுந்திரிகை பூக்கும் இக்கால பகுதியில் அதிகமான உஷணமான காலநிலை நிலவி வருவதால் பூக்கள் கருகி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் அதிகளவிலான விவசாயிகள் மரமுந்திரிகைச் செய்கையில் ஈடுபட்டுள்ளதுடன் வாகரை, வெல்லாவெளி உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்ட வருகின்றது
அதிகளவில் இலாப மூட்டக்கூடிய தொழிலாகிய மரமுந்திரிகைச் செய்கையில பெருமளவிலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பமான கால நிலையினால் உற்பத்தியாளர்கள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக
விவசாய நடவடிக்கைகளின் போது பயன் தரும் மா மரம், மற்றும் தென்னை, முந்திரி செய்கை மரக்கறி வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன்,
தென்னை மரம் தொடக்கம் பல மரங்கள் தற்போது கருக ஆரம்பிப்பதை காண முடிகின்றது.
இதேவேளை பொதுமக்கள் நீர்நிலைகளையும் மற்றும் நிழல் பகுதிகளையும் அதிகம் நாடி வருகிறார்கள். விவசாயிகள் வெள்ளரி பழ செய்கையை செய்வதில் மும்முரமாக ஆர்வம் காட்டி வருகின்றதை அவதானிக்க முடிந்தது. இதனால் வீதியோரத்தில் இளநீர், வெள்ளரி பழ வியாபாரம் களைகட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)






.jpeg)








