சித்திரை புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா.

 










( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “ மாபெரும் கலாச்சார விளையாட்டு விழா ” என்ற சிறப்பு நிகழ்வை நாளை மறுநாள் (18) சனிக்கிழமை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

காலையில் மரதன் ஓட்டம் இடம்பெறவிருக்கிறது.

மாலை கலாச்சார விளையாட்டு விழா  காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் கழகத் தலைவர் வை.கோபிகாந் தலைமையில் நடைபெறவுள்ளது.

விழாவில் பல்வேறு மரபு வழி கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகள், சிறப்பு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

 பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன்  கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வை சிறப்பிக்க  மேலும் பல முக்கிய அதிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கழகத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

காரைதீவு விளையாட்டு கழகம் கடந்த 28 ஆண்டுகளாக விளையாட்டு மற்றும் சமூக ஒற்றுமையை, கலாச்சாரத்தை, அடையாளத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன், இவ்விழா அதன் சாதனைகளை கொண்டாடும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.