தற்பொழுது நடைமுறையிலுள்ள கல்வி
சீர்திருத்தங்களுக்கு அமைய, முதலாம் தரத்தின் இரண்டாம் தவணைக்கான ஆசிரியர்
பயிற்சித் திட்டங்கள் அடுத்த மாதம் நடுப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படும்
என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தர மாணவர்களுக்குத் தேவையான
செயற்பாட்டுப் புத்தகங்களை (Activity Books) விநியோகிக்கும் பணிகள் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.





