வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி பகுதிகளில் உணவு கையாளும் நிலையங்கள் மீது சுகாதாரப் பரிசோதனை.
















































வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் மீது சுகாதாரப் பரிசோதனை

வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களில் சுகாதாரப் பிரிவினர் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மொத்தம் 40 உணவு நிலையங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் சுற்றுச் சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. மு. அச்சுதன் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இப்பணியில் வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, ஆரயம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், பிராந்திய உணவு ஒளடத பரிசோதகர், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

பரிசோதனைகளின் போது உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 48 உணவு நிலையங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்கள் இல்லாமை மற்றும் சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் கையாளப்படுதல் போன்ற குறைபாடுகள் அதிகளவில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உணவுப் பொருட்களை கையாளுபவர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு கையாளுதல் தொடர்பான தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன்

எதிர்காலத்தில் உணவுப் பாதுகாப்பு தரநிலைகளை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.