மடத்தடி மீனாட்சியம்மனின் பாற்குடபவனி

 












( வி.ரி.சகாதேவராஜா)
 வரலாற்று பிரசித்தி பெற்ற மரத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் பாற்குடபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில் பாற்குட பவனி கிரியைகள் நடைபெற்றன.

நூற்றுக்கணக்கான மகளிர் பால்குடம் ஏந்தி வலம்வந்தார்கள்.

 முன்னதாக இப் பாற்குடபவனி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மீனாட்சி அம்பாள் ஆலயத்தை அடைந்து அங்கு பால் சொரியப்பட்டது.

ஆலய பரிபாலன சபை தலைவர் கி.ஜெயசிறில்,  ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட நிருவாக சபையினர் மற்றும் பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.