தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒரே அணியில் இணைந்து செயற்படவேண்டும் .

 


தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒரே அணியில் இணைந்து ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியமென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டுமென்ற நோக்கில் தற்போது பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். துறைநீலாவணையில் நடைபெற்ற யுனைட்டெட் விளையாட்டுக்கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அனைத்து தமிழ் மக்களும் தமிழர் சார்ந்த அரசியல் கட்சிகளும் ஒற்றுமையுடன் எதிர்கால சந்ததியை கருதிற்கொண்டு ஒரே குடையின் கீழ் பயணித்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்கும்” என்றார்.