வரதன்
சித்திரைபுத்தாண்டை முன்னிட்டு கிழக்கு மாகாண மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் போக்குவரத்து போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்குடனும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த விசோட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக பொதுமக்கள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து மட்டக்களப்பு நகர் வந்து சித்திரை புத்தாண்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது
இவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்க அமைவாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.





