மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கான நடமாடும் பற்சிகிச்சை முகாம்


















உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு   சுகாதார அமைச்சகத்தினால் நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கு வாய் சுகாதாரம் தொடர்பான உடனடி சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு வழங்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று  17 /4/2026  நடமாடும் பற்சிகிச்சை முகாம் ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர்.ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர், பிராந்திய பற்சிகிச்சை நிபுணர் டாக்டர் சி. கோகுலரமணா, பற்சிகிச்சை நிபுணர்களான டாக்டர் (திருமதி) கி. கேதீசன், டாக்டர் (திருமதி) யா. சிறிபரதன், டாக்டர் எம்.வி.எம். முபீஸ், பற்சிகிச்சையாளர் திருமதி அக்கீலா மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு கைதிகளுக்கு பற்சிகிச்சை சேவைகளையும் விழிப்புணர்வு அறிவுரைகளையும் வழங்கினர். இதில் முக்கிய அம்சமாக கைதிகள் வைத்தியசாலைக்கு சென்று பற் சிகிச்சைபெறுவதில் உள்ள அசாதாரண நிலையை தவிர்க்கும் முகமாகவும்
 கைதிகளின் பற்சுகாதாரத்தை   கருத்தில் கொண்டும் இச்சேவை முன்னெடுக்கப்பட்டதுடன் அவர்களுக்கு      தேவையான பற்சிகிச்சை அளிக்கப்பட்டது.