2020 அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில்,
தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கும்
வெளிப்படையான விசாரணைகளை பாராட்டுவதாக தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இந்த வரவேற்பை வெளியிட்டார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இந்த வரவேற்பை வெளியிட்டார்.
சுரேஷ் சலே போன்ற உயர் அதிகாரிகள் கைது
செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, விசாரணைகள் மீதான நம்பிக்கையை
அதிகரித்துள்ளதாக சாணக்கியன் தெரிவித்தார்.
இந்த விசாரணைகளுக்குத் தமது தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.