தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற குழுவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

 



நிகவெரட்டிய – கொபெய்கனே பகுதியில் அமைந்துள்ள தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற குழுவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கடவத்தை பகுதியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட குழுவே இந்த அனர்த்தத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் காணாமல் போனவர்களில் மேலும் நால்வரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
இதனுடன், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மீட்கப்பட்ட இருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் காணாமல் போயிருந்த இருவரை தேடும் பணிகள் கடற்படையினரின் உதவியுடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகச் சென்ற இடத்தில் இவ்வாறான சோகம் நிகழ்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.