சுமன்
முன்னாள் பா.உ ஜனாவினால் 40 மில்லியன் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்பட்ட விளையாட்டரங்கு திறந்துவைப்பு...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்களினால் 2024ம் ஆண்டு 40 மில்லியன் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோலுக்கிணங்க புதிதாக நிர்மானிக்கப்பட்ட கண்ணனி விளையாட்டு மைதானத்தின் ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படுகின்ற செட்டிபாளையம் பிறீமியர் லீக் போட்டி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வின் போது குறித்த விளையாட்டரங்கு திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜானா, மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபை தவிசாளர் எம்.வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக நிருவாகிகள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது விளையாட்டு வீரர்கள் புடைசூழ அதிதிகள் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், புது கட்டிடத்திற்கான பால் பொங்கி தேங்காய் உடைத்து அதிதிகளினால் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுட, திரைநீக்கம் செய்யப்பட்டு விளையாட்டு மைதான பாவனைக்கு கட்டிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)






