31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

 


இந்த ஆண்டு வெசாக் பௌர்ணமி மே 30ஆம் திகதி வருவதால், முன்னதாக மே 2ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 
பொது நிர்வாக அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, வெசாக் தினத்துக்கு மறுநாளான மே 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதிலும், அன்றைய தினம் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.