சித்திரை புத்தாண்டு சுபநேர அட்டவணைக்கு அமைவாக, மரக்கன்றுகளை நாட்டுவதற்கான சுபவேளை இன்று ( 23) ஆரம்பமாகியுள்ளது.
புத்தாண்டு
சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக, இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த
மரக்கன்று நடுகைக்கான சடங்கு இன்றைய நாளில் மேற்கொள்ளப்படுகின்றது.
பாரம்பரிய
பஞ்சாங்கத்தின்படி, இந்த நற்காரியத்தில் ஈடுபடுவோர் பொன்னிற ஆடை அணிந்து
வடக்கு திசையை நோக்கி நின்று மரக்கன்றுகளை நடுதல் வேண்டும்.
சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கும், எதிர்கால சந்ததியினருக்காக
பசுமையான சூழலை உருவாக்குவதற்கும் இவ்வாறான பாரம்பரிய நடைமுறைகள்
ஊக்கமளிக்கின்றன.
நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் இந்த சுபவேளையில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் இச் சம்பிரதாயத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாடெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் இந்த சுபவேளையில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் இச் சம்பிரதாயத்தை முன்னெடுத்து வருகின்றனர்.