மட்டக்களப்பு, தாழங்குடா, உலகநாச்சிபுரம் மண்முனைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்து மஹோற்சவமானது 24.03.2026 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 02.03.2026 தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது. இத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவானது 01.03.2026 பங்குனி உத்தர சுபமுகூர்த்த காலவேளையில் நிகழ்த்தப்பட்டது.
விநாயகப் பெருமான் தேர் மீது ஏறி அடியார்களால் வடம்பிடித்து செலுத்தப்பட்டு வெளி வீதி வலம் வந்தார். பழமை வாய்ந்த ஆலயமான பக்தர்களால் “மனையப் பிள்ளையார்” அலயம் என அழைக்கப்படும் இத் திருத்தலமானது மட்டக்களப்பினை ஆண்ட அரசிகளில் பிரதானமான உலகநாச்சி என்பவருடைய ஆட்சிக்காலத்தில் நிர்மானிக்கப்பட்டதாகும்.
கொக்கட்டிச் சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னரான வரலாற்றினைக் கொண்டமைந்த மண்முனைப் பிள்ளையார் ஆலயத்தின் புதிய கட்டுமானங்கள் நிர்மானிக்கப்பட்டு தற்போது இப் பிரதேசம் மண்முனை, உலகநாச்சிபுரம் எனப் பெயரிடப்பட்டு வருடாந்தம் மஹோற்சவப் பெருவிழாக்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)





