மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம் மற்றும் கழகக் கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்வின் தொடர்ச்சியாக ஆசியுரை, வரவேற்புரை மற்றும் தலைமையுரை இடம்பெற்றன.
மக்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பல்வேறு கலாசார விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
நிறைவாக, அதிதிகள் உரை மற்றும் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன், இரா, சாணக்கியன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக மண்முனை பிரதேச சபைத் தவிசாளர் திரு.கா.செந்தில்குமார், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் திரு.ம.சோமசூரியம், கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள மாகாணப் பொறியியலாளர் திரு.சு.சுகிஷன், புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர் திரு.அ.குலேந்திரராசா ஆகியோரும் கௌரவ அதிதிகளாக மண்முனை பிரதேச சபை உறுப்பினர்களான திரு. வே.சிவப்பிரகாசம், திரு.மு.கிருபேந்திரன், ஆலய நிர்வாகிகள் ஆகியோரும் மற்றும் அரச அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், டொல்பின் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ந .குகதர்சன்

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)





