மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான பேட்மின்டன் “ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026 போட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட பேட்மின்டன் விளையாட்டு கழகத்தின் தலைவர் வி.பேரின்பராஜா தலைமையில் ரோசாரியோ லேன் பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பேட்மின்டன் விளையாட்டு கழகத்தின் உட்புற விளையாட்டு அரங்கில்(19) இடம் பெற் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பேட்மின்டன் சங்கத்துடன் இணைந்து நடத்தும் இப்போட்டிகளில் இப்பிரதேச இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறன்களை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்க அதிபர் கருத்து தெரிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட பேட்மின்டன் கழக உறுப்பினர்களின் விடா முயற்சிகளையும், மாவட்டத்தில் பேட்மின்டன் விளையாட்டை மேம்படுத்துவதற்கான அவர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டை பாராட்டினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிகேடயம் மற்றும் சான்றிதழ்கள் பிரதம விருந்தினரால் வழங்கப்பட்டன.
“ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026” போட்டி, மட்டக்களப்பு மாவட்டத்தின் வளர்ந்து வரும் பேட்மின்டன் வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த மேடையாக அமைந்ததுடன் விளையாட்டு ஒற்றுமையையும் போட்டி உணர்வையும் ஊக்குவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் சுற்றுப் போட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் எஸ்.ஶ்ரீ முருகன், பொறியியலாளர் என். திருவருள் செல்வன் மற்றும் கழக உறுப்பினர்கள் பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.





