இலங்கையின் மிக உயரமான சுதை விக்கிரக 64 அடி உயர இராஜகோபுரத்தினையுடைய மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் பிரமோற்வசவம் இன்று 2026 04. 22ம் திகதி புதன் கிழமை காலை 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
இன்று மாலை
விசேட யாகாரம்பம் மூலமூர்த்தி அலங்கரபூஜை, தம்ப பூஜை, வசந்த மண்டப
அலங்காரபூஜை, சுவாமி உள்வீதி வெளி வீதி திருவிழா இடம் பெறும். திருவிழா
காலங்களின்போது பிள்ளையார், சிவன்பார்வதி, விஷ்ணு, வள்ளிதெய்வானை சமமேத
முருகபெருமான் மற்றும் சண்டேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் திருவிழா
காலங்களில் பவனி வருகை தொடச்சியாக ஒன்பது தினங்கள் இடம் பெற்று பத்தாம்
நாள் தீர்த்தோற்சவம்: 01.05.2026 (வெள்ளிக்கிழமை) இடம்பெறும்.
பிரமோற்வசவ திருவிழா காலங்களில்
புஸ்பாஞ்சலி திருவிழா, கர்ப்பூரஜோதித்திருவிழா,(அடியார்கள் கர்ப்பூர சட்டி
ஏந்தலாம் சதுர்வேதகோஷத்திருவிழா, பஞ்சமுக அர்ச்சனை திருவிழா(அடியார்கள்
தங்கள் நட்சத்திரங்களுக்கு அர்ச்சனை செய்யலாம்), மாம்பழத்திருவிழாவும்,
வேட்டைத்திருவிழா , சப்பரத்திருவிழாவும் எட்டாம் நாள் சித்திர தேர் வெள்ளோட்டமும்
ஒன்பதாம் நாள் 30.04.2026 வியாழன் காலை 8:00 மணிக்கு தேரோட்டம் இடம்பெறும்.
சித்திர தேர்ரோட்டமும் இடம் பெற்று பத்தாம் நாளாகிய சித்திரா பௌர்ணமியன்று 01.05.2026 வெள்ளி காலை 9:00 மணிக்கு தீர்த்தோற்சவமும் இடம் பெற உள்ளது
அன்றைய தினம் மாலை கொடியிறக்கமும் திருப்பொன்னூசல், சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சாரியார் உற்சவமும் ,இடம் பெறவுள்ளது. மேலும் பூங்காவன திருவிழா மற்றும் வைரவர் பூஜையும் இடம் பெறும்.
மேலும் திருவிழா காலங்களில் ஆலய முன்றலில்
பல்வேறுபட்ட சமய கலை நிகழ்வுகள் அறநெறி போட்டிகள் என்பன இடம்பெற உள்ளத்துடன் தினமும் அன்னதானமும் சிறப்பாக நடைபெறும்.





