மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு .2026.04.21

 

 

 

 



          





 

 

 

 

 







 

 

 







 

 








 

 








 






 



















































2019.04.21 அன்று இடம் பெற்ற உயித்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் 7 ம் ஆண்டு நினைவாக 21.04.2026 இன்று ''உதிரம்  சிந்திஉயிர் நீத்த எம்  உறவுகளுக்கு  உதிரம்  கொண்டு  செலுத்தும்  அஞ்சலி''  எனும் தொனிப்பொருளில் மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஜெயமிதுர்ஷன் தலைமையிலும், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும், இளைஞர் சேவை அதிகாரியும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தருமாகிய  A. தயாசீலன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இவ் இரத்ததான முகாமானது கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபை மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி, மற்றும் கௌரவ அதிதியாக   RF FATHER  N. அருள் நாதன்  அவர்கள் கலந்து கொண்டனர் ,  தொடர்ந்து  பல இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள், நலம் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் செய்யும் உன்னத பணியில் ஈடு பட்டிருந்தனர் 

இன்றைய இரத்த தான நிகழ்வில் 42- மேற்பட்டோர்    இரத்த கொடை வழங்கினார்கள் 

மட்/ போதனா வைத்தியசாலை இரத்தவங்கிக்கு  பொறுப்பான  வைத்திய அதிகாரிகளான      சஞ்சிதா ராஜபாரதி  மற்றும் ரிஷிகேஷ் அகியோர்களுடன் தாதிய உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.