மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 2 இலட்சம் மில்லி லீட்டர் கோடா ம‌ற்று‌ம் 63,750 மில்லி லீட்டர் கசிப்பு பொலிசாரினால் கைப்பற்றல் ஒரு நபர் கைது!

 


 

 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள   களப்பு பகுதியில் உற்பத்தி செய்து கொண்டிருந்த 2 இலட்சம் மில்லி லீட்டர் கோடா ம‌ற்று‌ம் 63,750 மில்லி லீட்டர் கசிப்பு பொலிசாரினால் கைப்பற்றல்  ஒரு நபர் கையும் களவுமாக கைது!

   2 இலட்ம்  மில்லி லீட்டர் கோடா 63,750 மில்லி லீட்டர் கசிப்பு  சட்டவிரோதமான முறையில் செய்யப்பட்ட கசிப்பு இன்று  அதிகாலை மீட்டுள்ளதாக  கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பதில் கடமை  பொறுப்பதிகாரி  வேணுஜன் தெரிவித்தார்.

 கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள களப்பு  பகுதியில்  சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு நபர் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்ததோடு,  இரண்டு பரல்கள், இரண்டு கலன்களில் உற்பத்தி செய்து வைத்திருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று 24.04.2026 வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை பொலிசார் நடாத்திய அதிரடி திடீர்  சுற்றி வளைப்புகளின் போதே 
இரண்டு பரல், இரண்டு கலன், 
சுத்து பைப் 02 கைப்பற்றப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ்  புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு  அமைவாக கொக்கட்டிச்சோலை பதில் கடமை நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வேணுஜன் அவர்களின்  ஆலோசனையின் கீழ் 
சட்ட விரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட  கசிப்பு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

முனைக்காடு பகுதியைச் சேர்ந்த 
 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்